ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதல் வைரஸ், யுகா, பெண் சிங்கம், நேற்று இன்று, ரெண்டாவது படம் என பல படங்களில் நடித்தவர் ரிச்சர்ட். நடிகர் அஜித்தின் மைத்துனர் ஆவார். தற்போது அந்தமான் உள்பட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அதோடு, பள்ளிக்கூடம் சாட்சி - என்ற படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். கதைப்படி ஆசிரியர் வேடத்தில் நடித்துள்ள ரிச்சர்ட், ஒரு அதிரடியான சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறாராம்.
மேலும், இந்த படத்தில் அவர் ஒரு சண்டை காட்சியில் நடித்தபோது, சில ஷாட்கள் டூப் போடப்பட்டபோது, அந்த டூப் நடிகருக்கும் தான் அணிந்திருந்த காஸ்டியூமையே கழற்றி கொடுத்து நடிக்க வைத்த ரிச்சர்ட், பின்னர் அவர் நடித்து முடித்ததும் அப்படியே அந்த காஸ்டியூமை தானும் போட்டு நடித்தாராம். டூப் நடிகர்கள் அணிந்த டிரஸ்ஸை நடிகர்கள் அணிந்து நடிப்பது வழக்கமில்லை என்றபோதும், நாம எல்லோருமே உழைப்பாளிகள்தான். அந்த வகையில் அவரது வியர்வைதானே இந்த சட்டையில் ஒட்டியிருக்கிறது. அதனாலென்ன என்று சொல்லி மீண்டும் அதே காஸ்டியூமை தான் அணிந்து நடித்தாராம் ரிச்சர்ட். அதைப்பார்த்து, அந்த சண்டை காட்சியை அமைத்த ஸ்டன்ட் மாஸ்டர் நாக்அவுட் நந்தா மற்றும் பள்ளிக்கூடம் சாட்சி படக்குழுவினர் அனைவருமே ஆச்சர்யமடைந்தார்களாம்