ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடித்த அதிசயப்பிறவி படத்தில் ரஜினியின் குருவாக நடித்தவர் காமெடியன் கிங்காங். அதன்பிறகு பரவலாக நடித்து வரும் கிங்காங், கடந்த சில ஆண்டுகளாக வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து வந்தார். அப்படி அவர்கள் இணைந்த காமெடி காட்சிகளும் பெரிய அளவில் பிரபலமானது. இப்போது வரை ஆதித்யா சேனலில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அதனால் வடிவேலுவுடன் மீண்டும் காமெடி காட்சிகளில் நடிப்பதற்கு ஆவலாக இருக்கிறாராம் கிங்காங்.
இதுபற்றி அவர் கூறுகையில், வடிவேலு மிகச்சிறந்த காமெடியன். அவரது பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என ஒவ்வொன்றையும் ரசிக்கும் ரசிகன் நான். அவருடன் எந்த காட்சியில் நடித்தாலும் நன்றாக மெருகேற்றி இப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லித்தருவார். அதனால்தான் அவருடன் நடித்த காமெடி காட்சிகள் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும், வடிவேலுவுடன் இணைந்து நான் 30க்கும் மேற்பட்ட படங்களில் துணை காமெடியனாக நடித்திருக்கிறேன். அப்படி நடித்த அத்தனை காமெடி காட்சிகளுமே பிரபலமானது. மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது. அதனால் அவர் நடிக்கும் படங்களில் தொடர்ந்து அவருடன் இணைய ஆர்வமாக உள்ளேன். தற்போது சில படங்களில் நடித்து வரும் அவர், இதுவரை என்னை அழைக்கவில்லை. இருப்பினும், அவரது அழைப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் கிங்காங்.