ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
குங்குமப்பூவே கொஞ்சி புறாவே, கோரிப்பாளையம் உள்பட பல படங்களில் நடித்தவர் ராமகிருஷ்ணன். போங்கடி நீங்களும் உங்க காதலும் -என்ற படத்தை இயக்கி நடித்தார். அவர் பெரிதாக எதிர்பார்த்த அந்த படம் கைகொடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது டீக்கடை பெஞ்சு -என்றொரு படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படம் காதல், காமெடி கலந்த ஜனரஞ்சகமான கதையில் உருவாகி வருகிறதாம்.
மேலும், இதற்கு முன்பு தேனீர் விடுதி என்றொரு படம் டீக்கடையை மையமாக வைத்து உருவானது. அந்த படத்தை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியிருந்தார். அதையடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படமும் ரஜினி முருகன் டீஸ்டாலை மையப்படுத்தி உருவானது. அந்த படங்கள் வரிசையில் இப்போது இந்த படமும் டீக்கடையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இதற்கு முன்பு தான் நடித்த படங்களை விடவும் இந்த படத்தில் கூடுதல் காமெடி செய்திருக்கிறாராம் ராமகிருஷ்ணன். முக்கியமாக, டீக்கடை பெஞ்சில் என்னென்ன உலக விசயங்கள் ஓடுகிறது என்பதை சுவராஸ்யமாக இந்த படத்தில் சொல்லப்போகிறார்களாம்.