ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ராடான் மீடியா சார்பில் ராதிகா சரத்குமார் தயாரித்து நடிக்கும் தொடர் 'வாணி ராணி'. ராதிகாவுடன் வேணு அரவிந்த், பிருத்விராஜ், ரவிகுமார், சாந்தி வில்லியம்ஸ், நீலிமா ராணி உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ஹரி பின்னணி இசை அமைக்கிறார். முதல் பகுதியை ரத்னம் இயக்கினார், அடுத்த பகுதியை வி.சி.ரவி இயக்கினார், தற்போது ஆர்.ராமச்சந்திரன் இயக்கிக் கொண்டிருக்கிறார். 2013ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கிய வாணி ராணி 1000 எபிசோடை எட்டியுள்ளது. 1000மாவது எபிசோட் இன்று ஒளிபரப்பாகிறது.
கதைப்படி நீண்ட காலம் பிரிந்திருந்த சாமிநாதன்-ராணி தம்பதியினர் மீண்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். வாணிக்கும், தாதா ஜீ.பிக்கும் மோதல் முற்றுகிறது. வாணி குடும்பத்திற்கும், ராணி குடும்பத்திற்கும் மீண்டும் மோதல் உருவாகிறது. 1000மாவது எபிசோடை தாண்டியும் பரபரப்புடன் நகர்கிறது 'வாணி ராணி'யின் கதை.