விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தின் மூன்றாம்பாகமாக எஸ் 3 என்ற படம் வளர்ந்து வருகிறது. ஹரி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இதுகுறித்து எஸ் 3 படக்குழுவினரிடம் விசாரித்தபோது இந்த தகவலை உறுதி செய்தனர். அதாவது, எஸ் 3 படத்தில் வித்யா என்ற பெண் பத்திரிகையாளராக ஸ்ருதி நடிக்கிறார். கதைப்படி சூர்யா மிகப்பெரிய வழக்கில் சிக்கிக் கொள்கிறாராம். அதிலிருந்து சூர்யா வெளியே வருவதற்கு பத்திரிகையாளரான ஸ்ருதி உதவுகிறாராம். பின்னர் இருவரும் சேர்ந்து வில்லனின் சாம்ராஜ்யத்தை உடைக்கின்றனராம். எஸ் 3 படத்திற்கு இந்த மாத இறுதி வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ஸ்ருதி.