ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ஆஸ்தான ஹீரோயின்களில் தீபிகா படுகோனேவும் ஒருவர். ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி, ‛பத்மாவதி' என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ப்ரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனே ஆகிய இருவரில் ஒருவர் கண்டிப்பாக நடிப்பார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இப்போது தீபிகா படுகோனே நடிப்பது உறுதியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஸ்ரேயா புரானிக் தான் பத்மாவதி படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறியிருக்கிறார். இதன் மூலம் தீபிகா நடிப்பது உறுதியாகியுள்ளது.