ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தூங்காவனம் படத்தின் தோல்விக்குப் பிறகு சபாஷ் நாயுடு படத்தில் பிசியாக நடித்து வருகிறார் கமல். இந்தப் படத்தை மலையாள இயக்குநர் ராஜீவ்குமார் இயக்குநவதாக இருந்தது. கடந்த மாதம் 6 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பு துவங்கப்பட்டபோது இயக்குநருக்கு உடல்நலம் சரியில்லாமல்போனது. எனவே, டி.கே.ராஜீவ்குமாருக்குப் பதில் கமலே இயக்க ஆரம்பித்தார்.
கமல் உடன் அவரது மகள் ஸ்ருதிஹாசன், மற்றும் ரம்யா கிருஷ்ணன், மனு நாராயணன், பிரம்மானந்தம் (தமிழ், தெலுங்கு), சௌரப் சுக்லா (ஹிந்தி) உட்பட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 'சபாஷ் நாயுடு' படத்தின் வெளிநாட்டு போர்ஷனுக்கான படப்பிடிப்பை லாஸ் ஏஞ்சல்ஸில் முடித்துவிட்டு, அண்மையில் சென்னைக்குத் திரும்பினார் கமல்.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் பண்ணி பார்த்துவிட்டு அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு செல்ல முடிவு செய்தாராம் கமல். அதன்படி இதுவரைக்குமான எடுத்த காட்சிகளை எடிட் பண்ணி தற்போது துரிதமாக முடித்திருக்கின்றனர். இப்படத்தின் 42 நிமிட காட்சிகளும், ஸ்ருதிஹாசன் பங்குபெற்ற பாடல் ஒன்றும் எடிட் செய்யப்பட்டுவிட்டதாம். இதை கமல்ஹாசன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார்.
விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளிவர இருக்கிறது.