ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
6வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா, கடந்த இரண்டு நாட்களாக சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதன்படி, தமிழ் படங்களுக்கான 6வது சைமா விருதுகளைப் பெற்றவர்கள் விவரம் வருமாறு...
சிறந்த திரைப்படம் - தனி ஒருவன்
சிறந்த இயக்குனர் - விக்னேஷ் சிவன் (நானும் ரௌடிதான்)
சிறந்த நடிகர் - விக்ரம் (ஐ)
சிறந்த நடிகை - நயன்தாரா (நானும் ரௌடிதான்)
சிறந்த துணை நடிகர் - பிரகாஷ் ராஜ் (ஓ காதல் கண்மணி)
சிறந்த துணை நடிகை - ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
சிறந்த நடிகர் எதிர் கதாபாத்திரம் - அருண் விஜய் (என்னை அறிந்தால்)
சிறந்த இசையமைப்பாளர் - அனிருத் (நானும் ரௌடிதான்)
சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து (ஓ காதல் கண்மணி)
சிறந்த பின்னணிப் பாடகர் - அனிருத் (தங்கமே... - நானும் ரௌடிதான்)
சிறந்த பின்னணிப் பாடகி - ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல... - தங்கமகன்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - ஆர்ஜே பாலாஜி (நானும் ரௌடிதான்)
சிறந்த அறிமுக நடிகர் - ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)
சிறந்த அறிமுக நடிகை - கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
நானும் ரௌடிதான் படத்திற்கு சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர், சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த பின்னணிப் பாடகர் என 5 விருதுகள் கிடைத்தன.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலகத்தைச் சேர்ந்த பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.