போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
இந்தியாவிலுள்ள கர்நாடக இசைப்பாடகிகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமி முக்கியமானவர். இவர் இந்தியாவில் மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தி புகழ் பெற்றவர். 1966-ம் ஆண்டில் ஐ.நா.சபையில் பாடினார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்நிலையில், அவரது 100-வது பிறந்த தினத்தை ஐ.நா.சபை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியின்போது ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரியும் நடை பெற உள்ளதாம். அப்போது எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம்பெறுகிறதாம். இந்நிகழ்ச்சிக்கு இந்தியாவிலுள்ள இசைக்கலைஞர்கள் மட்டுமின்றி அயல்நாடுகளில் உள்ள பிரபல இசைக்கலைஞர்களும் அழைக்கப்பட உள்ளார்களாம்.