ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த 100 படங்களில் சுமார் 80 படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள்தான். பெரிய படங்களுக்கான திட்டமிடலுக்கும், சிறிய படங்களுக்கான திட்டமிடலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. சிறிய படங்களை தயாரிப்பவர்களும், இயக்குபவர்களும், மார்க்கெட்டிங் செய்பவர்களும் அனுபவமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள். மேலும் இப்படிப்பட்ட படங்களில் கொஞ்சம் ஓடக் கூடிய படங்களாக இருக்கும் படங்களை வாங்கி வெளியிடும் சில நிறுவனங்கள் செய்யும் ஆர்வக் கோளாறான விஷயங்களால் அந்தப் படங்கள் மக்களிடம் சென்று சேராமல் போய்விடுகின்றன.
ஜுன் 24ம் தேதி வெளியான 'மெட்ரோ, ராஜா மந்திரி' ஆகிய இரண்டு படங்களும் உண்மையிலேயே குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள். ஆனால், அந்தப் படங்களை சரியாக விளம்பரப்படுத்தாமல், எதை மையப்படுத்த வேண்டுமோ அதை மையப்படுத்தி விளம்பரம் செய்யாமல் அவர்களாகவே தங்களது படங்களின் தோல்வியைத் தழுவிக் கொள்கிறார்கள் என வினியோகஸ்தர்கள் கவலைப்படுகிறார்கள். இந்த இரண்டு படங்களையும் சரியான விதத்தில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருந்தால் வசூலைக் கொடுத்திருக்கும். ஆனால், அப்படிச் செய்யாமல் தவறு செய்துவிட்டார்கள் என படத்தைத் திரையிட்டவர்களும் புலம்புகிறார்கள். 'மெட்ரோ' படத்திற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே ஓரளவிற்கு வரவேற்பு இருக்கிறதாம். பி அன்ட் சி பக்கம் படம் பார்க்கவே யாரும் வரவில்லையாம். 'ராஜா மந்திரி' படத்திற்கு அது கூட இல்லை என்கிறார்கள்.
'அம்மா கணக்கு' படம் தனுஷின் தயாரிப்பு என்பதால் இந்தப் படத்திற்கு மற்ற இரண்டு படங்களை விட தனி அடையாளம் கிடைத்திருப்பதால், இந்தப் படம் ஒரு 10 நாட்களாவது ஓட வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
சிறிய படங்களைத் தயாரிப்பவர்கள் இனியாவது சரியான ஆட்களிடம் படத்தைக் கொடுப்பது நல்லது.