Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'அப்பா' திரைக்கதைக்கு 4 வருடங்கள் ஆனது - சமுத்திரக்கனி

25 ஜூன், 2016 - 18:12 IST
எழுத்தின் அளவு:
Samuthirakani-spends-4-years-for-Appa

இயக்குனராகவும், நல்ல நடிகராகவும் தற்போது பெயர் வாங்கி வரும் சமுத்திரக்கனியின் இயக்கம் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள படம் 'அப்பா'. சமீப காலமாக தமிழ்த் திரையுலகத்தில் அவ்வப்போது நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வழக்கமான மசாலா, காதல் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு வரும் இந்த மாதிரியான படங்கள் நல்ல திரைப்பட ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கின்றன.


'அப்பா' திரைப்படத்திற்காக 4 வருடங்களாக திரைக்கதை எழுதி வந்தேன் என படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி கூறுகிறார்.


“நான்கு விதமான அப்பாக்களைப் பற்றிய கதைதான் 'அப்பா'. பொதுவாகவே நான் இதற்கு முன் இயக்கிய படங்களில் அம்மாக்களை விட அப்பாக்களைப் பற்றி அழுத்தமாகப் பதிவு செய்திருப்பேன். அதை எனது ஒவ்வொரு படத்திலும் காணலாம். சிறிய வயதிலேயே அப்பாவை இழந்ததால் எனக்கு அப்பா இல்லாத வாழ்க்கை மீது ஒரு அதிகமான பார்வை இருந்தது. பல நிஜமான சம்பவங்கள்தான் இந்தப் படத்தை எடுக்கத் தூண்டியது. அதற்காக பல ஆய்வுகளைச் செய்து, திரைக்கதை எழுதி முடிப்பதற்கு எனக்கு நான்கு வருடங்கள் ஆனது.


நான் பிஎஸ்சி, பிஎல் படித்து முடித்தாலும் பின்னர் திரைத் துறைக்குதான் வந்தேன். ஒவ்வொரு அப்பாக்களும் அவரவர் பிள்ளைகளை அவர்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வாழவிடுங்கள் என்பதைச் சொல்லும் படம் இது. 9வது படிக்கும் எனது மகன் இப்போதே குறும்படம் எடுக்கிறேன் என என்னையும் நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளான். ஆனால், என் வீட்டிலோ அவனை படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தச் சொல்கிறார்கள். அவனைக் கண்காணிக்க ஒரு குழுவும் உள்ளது. அவன் என்னவாக ஆக வேண்டும் என்று முடிவெடுப்பதில் அவனுக்கும் உரிமை உள்ளது.


பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்ப்பதை விட்டு, அவர்களது பிரச்சனைகளையும் பேசித் தீருங்கள் என்று சொல்கிறேன். கண்டிப்பாக இந்தப் படம் கருத்து சொல்லும் படமல்ல. படத்தைப் பார்க்கும் போது நம் அப்பாவையும், நம் வாழ்க்கையையும் பார்ப்பது போலவே இருக்கும். நான் இதுவரை இயக்கிய படங்களிலேயே இந்தப் படம்தான் சிறந்த படம்,” என நல்லதொரு படத்தை இயக்கிய திருப்தியில் பேசுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.


இளையராஜா இசையமைத்துள்ள 'அப்பா' ஜுலை 1ம் தேதி வெளியாகிறது.


Advertisement
அனிருத் இசையில் சர்வதேச இசை ஆல்பம்அனிருத் இசையில் சர்வதேச இசை ஆல்பம் விஜய் ரொம்ப கலகலப்பானவர்! - கீர்த்தி சுரேஷ் விஜய் ரொம்ப கலகலப்பானவர்! - கீர்த்தி ...


வாசகர் கருத்து (3)

soundararajan - Udumalaipettai,இந்தியா
14 ஜூலை, 2016 - 15:10 Report Abuse
soundararajan நல்ல படம் எடுக்க தாமதம் ஆகலாம். வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Thiyagarajan Srimbhs - Coimbatore,இந்தியா
30 ஜூன், 2016 - 06:42 Report Abuse
Thiyagarajan Srimbhs வாப்பா வா. வந்து கலக்குடா. நீ கில்லாடி உன் டோன் உனக்கு ஹெல்ப் பண்ணுதுரியல் teachere
Rate this:
jayaraman - THILLAIVILAGAM  ( Posted via: Dinamalar Android App )
25 ஜூன், 2016 - 19:50 Report Abuse
jayaraman ஏங்க அவ்வளவு காலதாமதம். சமுத்திரக்கனி அவ்வளவு வீக்கானவரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Tik Tik Tik
  • டிக் டிக் டிக்
  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :சக்தி சவுந்தர்ராஜன்
  Tamil New Film Chennai 2 Bangkok

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in