ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் ரஜினியின், கபாலி பட வெற்றிக்காக, ரஜினி ரசிகர்கள் இப்போதே களமிறங்கி விட்டனர். நடிகர் ரஜினி நடித்த கபாலி படம், அடுத்த மாதம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலாய் என, நான்கு மொழிகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு படத்திற்கான பணிகள் முடிந்துள்ளன. மலாய் மற்றும் இந்தி மொழிகளுக்கான, டப்பிங் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் தணிக்கைக்கு செல்லும் இப்படத்தை, ஜூலை 15ல் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கபாலி வெற்றிக்காக, ரஜினி ரசிகர்கள் இப்போதே களமிறங்கி விட்டனர். சென்னை, மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கபாலி படம் பொறித்த போஸ்டர், டீ - -ஷர்ட், கை வளையம் எனப்படும், பேன்ட் உள்ளிட்டவற்றை இலவசமாக தந்து வருகின்றனர்.
ஏற்கனவே, படத்தின் முன்னோட்டம் எனப்படும், டீசர் மற்றும் பாடல் உள்ளிட்டவை இணையதளங்களில் சாதனை படைத்த நிலையில், ஒட்டு மொத்த இந்திய திரையுலகின் சாதனைகளை, கபாலி முறியடிக்கும் என, ரஜினி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.