Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்ஃபேக்: ரஜினி படத்துக்கு உதவி செய்த கமல்

23 ஜூன், 2016 - 15:28 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-kamal-helps-to-rajini-film

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களில் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது 'முள்ளும் மலரும்'. ரஜினிக்கு பிடித்த படமும் அதுதான், பிடித்த இயக்குனரும் முள்ளும் மலரும் இயக்கிய மகேந்திரன் தான். இது மகேந்திரனுக்கு முதல் படம்.


திரைக்கதை வசனகர்த்தாவாக இருந்த மகேந்திரன் தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் 'முள்ளும் மலரும்' கதையை சொன்னார். சண்டை காட்சி இல்லை. பாடல்கள் காட்சிகளும் சிம்பிளாக இருக்கிறது அதனால் அதிக செலவு பிடிக்காது என்று ஓகே சொல்லிவிட்டார் வேணு செட்டியார். ஆனால் படத்தை மகேந்திரன் பார்த்து பார்த்து செதுக்கியதில் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு காட்சி எடுப்பதே பெரிய விஷயமாக இருந்தது. இதனால் திட்டமிட்டதை விட படப்பிடிப்பு நாட்கள் அதிகமானதால் பட்ஜெட்டும் அதிகமானது. வேணு செட்டியார் எடுத்த வரைக்கும் போதும் என்று படத்தை போட்டு பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


படத்தில் வசனங்கள் குறைவாக இருக்கிறது. ஹீரோவுக்கு சண்டை காட்சி இல்லை. கையை வேறு வெட்டிவிட்டார்கள். இந்தப் படம் எப்படி ஓடும் என்று தவித்தார். அப்போது படத்தின் சூப்பர் ஹிட் பாடலான “செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல்...” பாடலும் அதையொட்டி சில காட்சிகளும் படமாக்கப்பட வேண்டியது இருந்தது.


தயாரிப்பாளர் வேணு செட்டியர் அந்த பாடலும் காட்சிகளும் இல்லாமே படத்தை வெளியிட தயாராகிவிட்டார். அதிர்ச்சி அடைந்த மகேந்திரன் கமல்ஹாசனிடம் தன் வேதனையை சொல்லியிருக்கிறார். உடனே கமல் “எந்த காரணத்தை கொண்டும் என் நண்பன் ரஜினி படம் நிற்க கூடாது” என்று அந்த பாடலையும், காட்சியையும் படமாக்கும் செலவை நான் தருகிறேன் என்று ஏற்றுக் கொண்டார். கமல் செலவில் பாடலும் காட்சியும் எடுக்கப்பட்டு அதன் பிறகு வெளிவந்தது.


முதல் இரண்டு நாள் காத்து வாங்கிய படம் பிறகு சாதனை படைத்தது. இளையராஜாவின், இசை, பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு, மகேந்திரனின் இயக்கம் இவற்றோடு கமலின் உதவியும் சேர்ந்ததால்தான் தமிழ் சினிமாவின் மகத்தான பொக்கிஷங்களில் ஒன்றான 'முள்ளும் மலரும்' வெளிவந்தது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in