ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தபோதில் இருந்தே எனக்கு போட்டி ரஜினிதான் என்று மேடைக்கு மேடை கூறி வந்தார் பவர்ஸ்டார். பின்னர் கிடா பூசாரி மகுடி -என்ற படத்தில் ஜானி படத்தில் ரஜினி நடித்தது போன்ற கெட்டப்பில் சலூன் கடை நடத்தும் வேடத்தில் நடித்தார். இந்த நிலையில், மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள அட்றா மச்சான் விசிலு என்ற படத்தில் சூப்பர் ஸ்டாராகவே நடித்துள்ளார் பவர்ஸ்டார். இந்த படமும் ஒரு ஹீரோவுக்கும், ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.
இதையடுத்து க க கா போ -என்ற படத்திலும் ரஜினி கெட்டப்பில் நடித்திருக்கிறார் பவர்ஸ்டார். க க கா போ -என்றால் கவிதாவும், கண்ணதாசனும் காதலிக்க போறாங்க என்று அர்த்தமாம். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் காமெடிய னாக நடிக்கும் பவர்ஸ்டார், 1980-களில் ரஜினி நடித்த கெட்டப்பில் நடித்துள் ளாராம். அவருக்கு ஒரு பாடலும் உள்ளதாம். அந்த பாடலில் ரோப்பில் தொங்கியபடி முதன்முறையாக நடனமாடியிருக்கிறாராம். அதோடு, ரஜினியின் ஹேர்ஸ்டைலில் தோன்றி அவரைப்போலவே அடிக்கடி முடியை கோதி விட்ட படி பில்டப் கொடுத்துள்ளாராம் பவர்ஸ்டார்.