ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ப்ரணிதா சகுனி, மாஸ் ஆகிய படங்களில் நடித்தார்.அதன் பிறகு ப்ரணிதாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.தெலுங்கில் பிசியாக இருக்கிறார் என்றும்.... இங்குள்ள பிரபல ஹீரோவின் உறவினரான இளம் தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் அதனால்தான் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்கிறார் ப்ரணிதா.விஜய் சேதுபதி நடிப்பில் 'சேதுபதி' படத்தை தயாரித்த நிறுவனம் அடுத்து ஜெய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது.
அறிமுக இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி இப்படத்தை இயக்குகிறார்.இப்படத்திற்கு 'எனக்கு வாய்த்த அடிமைகள்' என்று பெயரிட்டுள்ளனர்.இப்படத்தில்தான் ஜெய்க்கு ஜோடியாக ப்ரணிதா நடிக்கிறார்.இவர்களுடன் கருணாகரன், காளி வெங்கட், நவீன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது.