பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
விக்ரம் பிரபு கடைசியாக நடித்த படம் இது என்ன மாயம். எ.எல்.விஜய் இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே அடுத்து அவர்து நடிப்பில் தொடங்கப்பட்ட வாகா படம் தடங்கலுக்குள்ளானது. எனவே 'தகராறு' பட புகழ் கணேஷ் விநாயக் இயக்கத்தில் 'வீரசிவாஜி' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இப்படத்தில் நடிகை ஷாலினி அஜித்குமாரின் தங்கை ஷாம்லி கதாநாயகியாக நடித்துள்ளார்.
'ரோமியோ ஜூலியட்' படத்தை தயாரித்த 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லியுடன் ரோபோ சங்கர், ஜான் விஜய், நான் கடவுள் ராஜேந்திரன் முதலானோரும் நடித்திருக்கிறார்கள். 'வீரசிவாஜி' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டது! 'வீரசிவாஜி'யின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிசியாகியுள்ளனர் படக்குழுவினர்!
இதற்கிடையில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வந்த 'வாகா' படமும் ரெடியாகிவிட்டது. 'வாகா', 'வீரசிவாஜி' இரண்டில் எந்தப்படத்தை முதலில் ரிலீஸ் செய்வது என்று விக்ரம் பிரபுவுக்கு குழப்பம். இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் தங்களின் படம்தான் முதலில் ரிலீஸ் ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துள்ளனர். கடைசியில் பிரபு தலையிட்டு இந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறார்.
அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்ஸ்ட் 12-ஆம் தேதி அன்று வாகா ரிலீசாகிறது. 'வாகா'வை தொடர்ந்து சில வார இடைவெளியில் 'வீரசிவாஜி' வெளிவருகிறது. விக்ரம் பிரபுவின் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்.