மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
துபாயில் கார்டன் டிசைன் செய்து கொண்டிருந்த கஸாலி சினிமா எடுக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தார். 'சாய்ந்தாடு' என்ற படத்தை இயக்கி, தயாரித்தார். இதில் ஆதர்ஷ், அனுகிருஷ்ணா என்ற இரண்டு புதுமுகங்கள் நடித்தார்கள். இது மருத்துவதுறையில் நடக்கும் மோசடி பற்றிய படம். புதிதாக கண்டுபிடிக்கப்படும் ஒரு மருந்தை சர்வதேச நிறுவனம் தமிழ்நாட்டு நோயாளிகள் மீது பரிசோதித்து பார்க்கிறது. அதில் ஹீரோ சிக்கிக் கொள்ள அதிலிருந்து ஹீரோ தப்பி அதை எப்படி தடுக்கிறார் என்கிற கதை. இந்த படத்துக்கு தணிக்கை குழு 20 இடங்களில் கட் கொடுத்து 'ஏ' சான்றிதழ் வழங்கியது. இதனை எதிர்த்து மறு தணிக்கைக்கு சென்றார் கசாலி. அங்கு 'யுஏ' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.
இதுபற்றி கசாலி கூறியதாவது: பெரிய படங்களுக்கு அவர்கள் கேட்கும் சான்றிதழை கொடுக்கும் தணிக்கை குழு, சிறு பட்ஜெட் படங்களை மதிப்பதில்லை. மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு படம்தான் சாய்ந்தாடு. அதற்கு 20 கட் கொடுத்தார்கள். அத்தனை கட்டையும் கட் பண்ணினால் படமே காலி. அதனால்தான் மறுதணிக்கை சென்றேன்.
தணிக்கை அதிகாரிகள் என்னை போன்ற சிறு தயாரிப்பாளர்களை மணி கணக்கில் காக்க வைக்கிறார்கள். “நீங்கள் எல்லாம் எதுக்கு படம் எடுக்க வந்தீங்க”ன்னு கேட்குற அளவுக்கு போகிறார்கள். சில சமயம் அடிமைகள் போல நடத்துகிறார்கள். மே 13ந் தேதியே படத்தை வெளியிட முடிவு செய்து விளம்பரம் செய்திருந்தேன். தணிக்கை தாமதத்தால் வெளியிட முடியவில்லை. இதனால் எனக்கு பல லட்சம் நஷ்டம். தயாரிப்பாளர் சங்கம் சிறு தயாரிப்பாளர்களை கண்டு கொள்வதில்லை. தணிக்கை குழுவின் தன்னிச்சையான போக்கினால் பல சிறு தயாரிப்பாளர்கள் தினம் தினம் அவமானங்களை சந்தித்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.