சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சந்தானம் போன்ற காமெடியன்களுடன் சேர்ந்து கொண்டு கதாநாயகிகளை கலாய்த்து வந்த ஆர்யாவுக்கு, சமீபகாலமாக நடிக்கிற படங்கள் எல்லாமே தோல்வியடைந்து வருவதால் அவரது மார்க்கெட்டும் கிடுகிடுவென இறங்கியது. அதனால் அவசியம் உடனடியாக ஒரு ஹிட் தேவை என்கிற கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட அவர், இனிமேல் சட்டையில் மண் ஒட்டாமல் நடிக்கிற கதைகளை தொட வேண்டாம் என்று சட்டையே போடாமல் நடிக்கிற ஒரு கதையை ஓகே பண்ணினார். அதுதான் மஞ்சப்பை ராகவன் இயக்கும் கடம்பன் படம்.
இதுவரை விதவிதமான காஸ்டியூம்களில் வந்து கலக்கிய ஆர்யா, இந்த படத்தில் காட்டுவாசியாக நடிக்கிறார். முன்னதாக பல மாதங்களாக ஜிம்னாஸ்டிக் பயிற்சி எடுத்து 90 கிலோ வெயிட் போட்டு தனது உடல்கட்டை மாற்றி வந்த அவர், அந்த உடம்பை படம் முடியும் வரைக்கும் அப்படியே பாதுகாக்க வேண்டும் என்பதால், இப்போது தினமும் 40 முட்டைகள் மற்றும், 2 கிலோ சிக்கன் உணவுகளை சாப்பிடுகிறாராம். இதுதவிர பிரியாணி நடிகரான ஆர்யா இதுவரை தனது வீட்டிற்கு நடிகைகளை அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து வந்தவர், தான் டயட்ஸ் கடைபிடித்ததால் பிரியாணியை விட்டு விலகியே இருந்து வந்தார். ஆனால் இப்போது பிரியாணியையும் சேர்த்து புல் கட்டு கட்டுகிறாராம்.