ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'சென்னை 28' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெங்கட்பிரபு. இதில் 'சென்னை 28' படத்தில் நடித்த அனைவரும் அதே கேரக்டரில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு கிளைமாக்சை நெருங்கி உள்ளது. கிளைமாக்சில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் தன்னிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றி தற்போது இயக்குரானகியிருப்பவர்கள், மற்றும் தற்போதைய உதவியாளர்களை இணைந்து அவர்களை ஒரு அணியாக களம் இறக்குகிறார். 'நளனும் நந்தினியும்' படத்தை இயக்கிய வெங்கடேஷ் ராமகிருஷ்ணா, 'வடகறி' படத்தை இயக்கிய சரவண ராஜன், 'கனிமொழி' படத்தை இயக்கிய ஸ்ரீபதி, 'நவீன சரஸ்வதி சபதம்' படத்தை இயக்கிய சந்த்ரு உள்பட பலர் நடிக்கிறார்கள். இதுதவிர பிரமாண்ட ஷெட் போடப்பட்டு அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.