ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
திருட்டு டிவிடியை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டு அலைகிறார்கள் சினிமாக்காரர்கள். விஷால் கூட ஊர்ஊராக சென்று திருட்டு டிவிடி வேட்டையில் ஈடுபட்டார். அவரது முயற்சியை திரைத்துறையில் உள்ளவர்களே ஆதரிக்கவில்லை.
இந்நிலையில் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி நடித்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தின் பைரசி வராமல் இருக்க புதிய முயற்சி ஒன்றை கையாண்டது லைகா நிறுவனம். "திருட்டு டிவிடிக்களை ஒழிக்கும் ஒரு முன்மாதிரி முயற்சியை எடுத்துள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம். எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்துக்கு வர்த்தக ரீதியான டிரேட்மார்க் பதிவு ஒப்புதல் எண்ணை அறிவுசார் காப்புரிமை மையத்திலிருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது.
இவ்வாறாக பதிவு செய்துள்ளதன் மூலம் சட்டவிரோதமாக இப்படத்தை பதிவிறக்கம் அல்லது பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக லைகா சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இத்தகைய முயற்சி திரையுலகில் முதல் முயற்சி. இதன் மூலம் திருட்டு டிவிடிக்கள் தயாரிப்பவர்களை தண்டனைக்கு உட்படுத்த முடியும்" என்று லைகா நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது.
எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் நேற்று அதாவது, ஜூன் 17-ம் தேதி வெளியானது. ஆனால் இப்படியொரு மொக்க படம் சமீபத்தில் வந்ததில்லை என்கிற அளவுக்கு படத்துக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்து கொண்டிருக்கிறது.