ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர்நீச்சல்' உள்பட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சூசா குமார் 'மாணிக்' படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். ஹீரோவாக நடிப்பவர் மா.பா.கா.ஆனந்த். மோஹிதா சினி டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சுப்பிரமணியம் பி.வினோத் தயாரிக்கிறார்கள். மார்டின் இயக்குகிறார். எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். தரண் குமார் இசை அமைக்கிறார்.
படத்தின் தொடக்க விழா பூஜையுடன் நேற்று ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. தொடர்ந்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே ஷெட்யூலில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். சென்னையில் வாழும் ஒரு பேச்சிலரின் கதையாம். மா.பா.கா ஆனந்த் ஒரு படிக்காத மேதையாக வருகிறார், சூசா குமார் வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் பேண்டசி சமாச்சாரங்கள் இருக்கிறது என்கிறார் இயக்குனர் மார்ட்டின்.