ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாக்காரர்களுக்கு சிம்மசொப்பனம் சென்சார்போர்டுதான். என்னதான் கோடிகளைக் கொட்டி படம் எடுத்தாலும் சென்சாரில் அனுமதி கிடைக்கவில்லை என்றால் அந்தப்படம் ரிலீஸ் ஆகவே முடியாது. யு சான்றிதழுக்குப் பதில் யுஏ அல்லது ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டால் அந்தப்படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது. எனவே சென்சாருக்கு படத்தை அனுப்பி வைத்துவிட்டு வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு நிற்பார்கள் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும்.
சினிமாக்காரர்களின் இந்த பலவீனத்தைப் புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ தணிக்கைக்கு வரும் படங்களைப்பார்த்துவிட்டு தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் படுத்தி எடுப்பார்கள் தணிக்கை அதிகாரிகள். காலம்காலமாக இப்படி நடந்து வந்தாலும், தணிக்கை அதிகாரிகளை சினிமாக்காரர்கள் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை.
கஸாலி என்ற புதுமுக இயக்குநர் இயக்கிய சாய்ந்தாடு என்ற படம் அண்மையில் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவ உலகத்தில் நடக்கும் மிகப்பெரிய கொடூரத்தைப் பற்றிய சாய்ந்தாடு படத்தை பாராட்டாமல் சுமார் 50க்கும் மேற்பட்ட கட்டுகளை கொடுத்ததோடு, ஏ சான்றிதழ்தான் தருவேன் என்று சொல்லி இருக்கிறார் தணிக்கை அதிகாரி.
அதற்கு உடன்பட மறுத்த கஸாலி பிறகு ரிவைசிங் கமிட்டி சென்று சொற்ப கட்டுகளுடன் யுஏ சான்றிதழ் பெற்றார். தணிக்கையில் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளி உலகுக்கு தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில், ஒரு டீசர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். சென்சாரை செமத்தியாய் கலாய்குக்கும் அந்த டீசரை பார்த்துவிட்டு படத்துறையில் உள்ளவர்கள் கஸாலியை பாராட்டித்தள்ளுகிறார்கள்.
கஸாலி... முன்னாள் பத்திரிகையாளர். அதான் இம்புட்டு தைரியமா?