ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கபாலி' பற்றி இனி எது வந்தாலும் அது டிரென்டிங்கிலும், ஹிட்ஸ்களிலும் கலக்கும் என்று தெரிகிறது. 'கபாலி' பாடல்கள் வெளியான அன்றே படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'கபாலி' பாடல்கள் டீசர் வெளியாகும் என்று அறிவிப்பு வந்தது. அதன்படி, நேற்று இரவு 8 மணியளவில் 'நெருப்புடா...' பாடல் டீசர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே 1 லட்சம் பார்வைகளைத் தாண்டிய டீசர் ஒரு இரவுக்குள்ளாகவே 8 லட்சம் பார்வைகளைத் தாண்டிய கபாலி டீசர், காலை 10 மணியளவில் 11 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. அதோடு 60 ஆயிரத்திற்கம் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
இந்த 'நெருப்புடா' பாடல் டீசரில் ரஜினியின் புதுப் புது விஷுவல்களும் மற்ற நட்சத்திரங்களின் விஷுவல்களும் இடம் பெற்றுள்ளது. ரஜினியின் தீவிர ரசிகர்கள் சிலர் அதற்குள் இந்தப் படம் 'பாட்ஷா 2' என்றும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். வெறும் 35 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த டீசர் 'பயமா.....' என்ற வசனத்துடன் ஆரம்பமாகி, 'நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்பி வந்துட்டேன்னு...' என்ற வசனத்துடன் முடிகிறது.
'கபாலி' படத்தின் மற்ற பாடல் டீசர்களும் ஒவ்வொன்றாக வெளியாக உள்ளது.