ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வரலாற்றுப் படங்களை எடுப்பதற்கென்று தனி தைரியம் வேண்டும். வரலாற்றுக் கதைகளில் கதாபாத்திரங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கும் நட்சத்திரங்களும் முக்கியம். இன்றைக்கும் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்றால் பலருக்கும் சிவாஜிகணேசன் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததன் தோற்றம்தான் முதலில் வரும். திறமையான நட்சத்திரங்கள் மட்டுமே வரலாற்று கதாபாத்திரங்களுக்கு முழுமையான உயிரைக் கொடுக்க முடியும்.
ஹிந்தியில் மகத்தான படங்களைக் கொடுத்த அஷுதோஷ் கௌரிகர் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'மொகஞ்சதாரோ' படத்தில் பூஜா ஹெக்டேவின் முதல் பார்வை போஸ்டர் இன்று காலை வெளியிடப்பட்டது. பழங்கால அரசிக்குரிய தோற்றத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது அந்த போஸ்டர். ஹிந்தித் திரையுலகில் பூஜா ஹெக்டேவுக்கு ஒரு மிகப் பெரும் வரவேற்பு காத்திருக்கிறது என்பது மட்டும் அந்தப் போஸ்டரைப் பார்த்ததும் தெரிகிறது.
'முகமூடி'யில் முத்திரை பதிக்காமல் போனாலும் ஹிந்தியில் பூஜா ஹெக்டே முத்திரை பதித்து விடுவார் என்றே தோன்றுகிறது. 'இருவர்' ஐஸ்வர்யா ராஜ், 'ரட்சகன்' சுஷ்மிதா சென், 'தமிழன்' பிரியங்கா சோப்ரா வரிசையில் 'மொகஞ்சதாரோ' வெளியீட்டிற்குப் பிறகு பூஜா ஹெக்டே இடம் பிடிப்பார் என்றே தோன்றுகிறது.