ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா உடனான பிரிவுக்குப் பிறகு மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார் பிரபுதேவா. ஒரு பக்கம் டைரக்டராக பிசியாக இருக்கும் பிரபுதேவா, இன்னொரு பக்கம் பிரபுதேவா ஸ்டுடியோஸ் என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி படங்களையும் தயாரித்து வருகிறார். இவருக்கு ஐசரி கணேஷ் பெரிய அளவில் ஃபைனான்ஸ் செய்வதோடு, பிரபுதேவாவின் நிறுவனத்தில் பார்ட்னராகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிக்க 'தேவி' என்ற படத்தை தயாரித்து வருகிறது - பிரபுதேவா ஸ்டுடியோஸ். தெலுங்கில் 'அபிநேத்ரி' என்ற பெயரிலும் ஹிந்தியில் 'டெவில்' என்ற பெயரிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது. இது ஒரு நடிகையைப் பற்றிய கதையாம். எனவே நயன்தாராவின் கதையாக இருக்கலாம் என்ற சந்தேகம் திரைத்துறையில் பரவிவருகிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் பாப் கார்ன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் தேவி படத்தின் டீஸர் ஜூன்-17 அன்று வெளியாகவிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது. இப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.