ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2015ம் ஆண்டில் ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் ஆகிய படங்களின் வெற்றி ஜெயம் ரவியை தமிழ்த் திரையுலகில் இன்னும் கொஞ்சம் முன்னணிக்குக் கொண்டு வந்துவிட்டது. தற்போது ரோமியோ ஜுலியட் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கி வரும் போகன் படத்தில் ஜெயம் ரவி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படம் தான் ரவி நடித்து அடுத்து வெளிவர உள்ள படமாக இருக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் விஜய் இயக்க உள்ள புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.
மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளது பற்றிய அறிவிப்பு நேற்று வெளியாகியது. இந்தப் படங்களுடன் கௌதம் மேனன் அடுத்து இயக்க உள்ள படத்திலும் ஜெயம் ரவி நடிக்கலாம் என்ற தகவல் வெகு நாட்களுக்கு முன்பே வெளிவந்தது. இவற்றிற்கும் அடுத்து மீண்டும் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். இந்தப் படம் ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாக வாய்ப்புள்ளது. ஆக, இப்போது நடிக்கும் போகன் படத்துடன் அடுத்தடுத்து மேலும் நான்கு படங்களில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார். அனேகமாக 2017 முடியும் வரை அவருடைய கால்ஷீட் மற்றவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பில்லை.