Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டைரக்டர்களை ஓடவைக்கும் காஜல்அகர்வால்!

14 ஜூன், 2016 - 08:58 IST
எழுத்தின் அளவு:
kajal-made-all-the-directors-to-ran-away-with-some-conditions

தென்னிந்தியா சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபல நடிகையாக இருப்பவர் காஜல்அகர்வால். அதோடு இதற்கு முன்பு பெரிதாக பரபரப்பை ஏற்படுத்தாத அவர், சமீபகாலமாக உதட்டு முத்தக்காட்சிகளில நடித்து தனது பெயரளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டு வருகிறார். மேலும், தற்போது தமிழில் விக்ரமுடன் கருடா, ஜீவாவுடன் கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல்அகர்வாலுக்கு தனது சமகாலத்து நடிகைகளெல்லாம் லீடு ரோலில் நடிக்கத் தொடங்கி விட்டதால் தானும் ரூட்டை மாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் அளவுக்கதிகமாகியிருக்கிறது.


அதனால், இனிமேல் தான் நடிக்கிற படங்களில் தனது பர்பாமென்சும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கும் காஜல்அகர்வால், தன்னிடம் கதை சொல்ல வந்த சில டைரக்டர்களிடம் மொத்த கதையையும் கேட்டதும், இந்த ரோல் ரொம்ப சாதாரணமாக உள்ளது. சினிமாவில புதிதாக என்ட்ரியாகும் நடிகைகளுக்குதான் இது பொருத்தமாக இருக்கும். ஆனால் நான் இப்போது முன்னணி நடிகை. இந்த மாதிரியெல்லாம் நிறைய படங்களில் நடித்து விட்டேன். இப்போது எனக்கு அது போரடித்து விட்டது. அதனால், வெயிட்டான கேரக்டர் கொடுங்கள். எனது திறமைக்கும் தீனி போடுங்கள் என்று வாய் விட்டு கேட்கிறாராம்.


ஆனால், நயன்தாரா, திரிஷா போன்ற சில நடிகைகள் நடித்தால் லீடு ரோலில்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்துக்கொண்டிருப்பதால் காஜலாவது செட்டாவாரா? என்று செல்லும் டைரக்டர்களுக்கு அவரது இந்த பதில் ஏமாற்றத்தை கொடுக்க, அவரிடமிருந்து தப்பித்து புதுமுக நடிகைகளை தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in