பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சாணக்யா படத்திற்கு பிறகு டி.கே.ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் சபாஷ் நாயுடு. தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பத்து வேடங்களில் ஒன்றான பல்ராம் நாயுடு வேடம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதனால் அந்த வேடத்தை மையமாக வைத்து சபாஷ் நாயுடு என்ற படத்திற்கான கதையை ரெடி பண்ணினார் ராஜீவ்குமார். கமலுடன், ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன், பிரமானந்தம் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 17-ந்தேதி முதல் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இளையராஜா இசையமைக்கிறார்.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது படத்தை இயக்கி வந்த ராஜீவ்குமாருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இப்போது கமலே இயக்கி நடித்து வருகிறார். அதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜீவ்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். அதனால், சபாஷ் நாயுடு படத்தை கமலே இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார். கமலின் ராஜ்கமல் யூனிட்டில் உள்ள சில இயக்குனர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்களாம்.