ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் ஹீரோ அவதாரம் எடுத்த னர். ஆனால் அப்படி நடிக்க வந்தவர்களால் ஓரிரு படங்களுக்குப்பிறகு நிலைக்க முடியாமல் மறுபடியும் இயக்குனர்களாகி விட்டனர். ஆனால் தற்போது இசை யமைப்பாளர்கள் ஹீரோக்களாக உருவெடுத்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆதியும் ஹீரோவாகியிருக்கிறார். இவர்களில் விஜய்ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவரும் மார்க்கெட்டில் இடம்பிடித்து விட்டனர்.
இவர்களின் விஜய் ஆண்டனி முழுநேர நடிகராகி விட்டதால், தனது படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வருகிறார். மற்றவர்களின் படங்களுக்கு இசையமைப்பதில்லை. ஆனால் ஜி.வி.பிரகாஷ், தனது படங்களுக்கு மட்டுமின்றி, இடையிடையே மற்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்கிறார். தலைவாவைத் தொடர்ந்து விஜய்யின் தெறி படத்திற்கும் இசையமைத்தார். அப்படி அவர் இசையமைக்கும் படங்களின் பாடல்கள் பெரும்பாலும் ஹிட்ட டித்து வருகின்றன.
இந்த நிலையில், தற்போது டார்லிங் பட டைரக்டர் சாம் ஆண்டன் இயக்கத்தில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் நாயகனாக நடித்துள்ள ஜி.வி.பிர காஷ், அந்த படத்தில் இரண்டு பாடல் சூழலுக்கு பழைய படங்களின் பாடல்களில் இருந்து ரீமிக்ஸ் செய்திருக்கிறார். அந்த வகையில் எம்ஜிஆர், சந்திரபாபு பாடல்களை ரீமிக்ஸ் செய்துள்ள அவர், இந்த பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. குறிப்பாக, சந்திரபாபுவின் பாடல்கள் மற்றும் நடனத்திற்கு நான் பெரிய ரசிகன். அதனால்தான் அவரது பாடலை ரீ-மிக்ஸ் செய்ததோடு, அவர் சாயலிலேயே இந்த படத்தில் நான் நடனமும் ஆடியிருக்கிறேன் என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.