மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
விஜய் நடித்த பிரண்ட்ஸ், சச்சின், வில்லு, சுறா, காவலன் என பல படங்களில் முக்கிய காமெடியனாக நடித்தவர் வடிவேலு. அப்படி அவர்கள் நடித்த படங்களின் காமெடி பெரிய அளவில் ஒர்க்அவுட்டானது. ஆனால் பின்னர் வடிவேலு காமெடியனாக நடிப்பதை தவிர்த்த பிறகு விஜய் படங்களில் மற்ற காமெடியன்கள் இடம்பெற்று வருகின்றனர். அந்த வகையில், குணசித்ரம், காமெடி வேடங்களில் கலந்துகட்டி நடித்து வரும் தம்பி ராமைய்யா, விஜய்யின் ஜில்லா, புலி படங்களில் காமெடியனாக நடித்தார்.
இந்த நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் 60-வது படத்திலும் தம்பி ராமைய்யாதான் முக்கிய காமெடியனாக கமிட்டாகியிருக்கிறார். இதே படத்தில் காமெடியனாக சதீசும் நடித்தபோதும், விஜய்யுடன் அதிகப்படியான காட்சிகளில் தம்பி ராமைய்யாதான் நடிக்கிறாராம். மேலும், சமீபகாலமாக குணசித்ர வேடங்களில் அதிகமாக நடித்து வரும் அவர் இந்த படத்தில் கிட்டத்தட்ட வடிவேலு பாணியில் காமெடியில் பின்னி எடுக்கப்போகிறாராம்.