ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நிமிர்ந்து நில் படத்திற்குப்பின் இயக்குனர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் 'அப்பா'. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் புரமோஷனை வித்தியாசமான முறையில் செய்து வருகிறார் சமுத்திரக்கனி. அதாவது திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது அப்பா குறித்த உணர்வுகளை இரண்டு நிமிடங்கள் பகிர்ந்து கொள்ளும் காட்சியை அவ்வப்போது வீடியோக்களாக இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழ் பிரபலங்கள் நிறையப்பேர் தங்களது அப்பா பற்றி பேசியுள்ள நிலையில் சமீபத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கூட இந்தப்படத்திற்காக தனது அப்பா குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருந்தார்.
இப்போது அதில் லேட்டஸ்ட்டாக இணைந்து வாய்ஸ் கொடுத்துள்ளவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். ஆம் சமுத்திரக்கனியின் நட்புக்காக இந்த 'அப்பா'வுக்காக தனது அப்பா பற்றி வாய்ஸ் கொடுத்துள்ளார் மோகன்லால். கடந்த 2010ல் மலையாளத்தில் வெளியான 'ஷிகார்' படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்ததில் இருந்தே அவருடன் நல்ல நட்பில் இருந்து வருகிறார் சமுத்திரக்கனி.
அதுமட்டுமல்ல தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் ஒப்பம் படத்திலும் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துவருகிறார் சமுத்திரக்கனி. அவரது இந்த 'அப்பா' வீடியோ குறித்து கேள்விப்பட்ட மோகன்லால் தானே முன்வந்து தனது தந்தையை பற்றிய வீடியோ பதிவில் பேச ஒப்புக்கொண்டாராம்.