ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெரினா படத்தில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், எதிர்நீச்சல், மான்கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் என அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாகி விட்டார். இந்நிலையில், அவர் தற்போது நடித்துள்ள ரெமோ படம் மெகா பட்ஜெட்டில் உருவாகியிருப்பதோடு, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி என முன்னணி கலைஞர்கள் அப்படத்தில் பணியாற்றியுள்ளனர். அதோடு, அதில் ஒரு பெண் வேடத்திலும் நடித்து அடுத்த லெவல் பர்பாமென்ஸை வெளிப்படுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதையடுத்து மோகன்ராஜா இயக்கும் மெகா படத்தில் நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் ரஜினி, விஜய் படங்களைப்போன்று ஒரு ஓப்பனிங் பாடலோடு சிவகார்த்திகேயனுக்கு என்ட்ரி கொடுக்கிறாராம் மோகன்ராஜா. ஆக, தற்போது சிவகார்த்திகேயனின் சம்பளமும் கோடிகளில் நிற்கும் நிலையில், முன்னணி ஹீரோ அந்தஸ்தை பெற்று விட்டார். அதற்கு அடையாளமாக தற்போது இன்னொரு நிகழ்வும் நடந்துள்ளது.
அதாவது, ரஜினி, கமலின் பெயரில் அவர்களது ரசிகர்கள் கடைகள் திறப்பது போன்று இப்போது சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படத்தின் பெயரில் அவரது ரசிகர் ஒருவர் தேனியில் ஒரு டீக்கடை திறந்துள்ளார். அதோடு அந்த கடைக்கு அருகே ரஜினிமுருகன் படத்தில் இடம்பெற்ற சிவகார்த்திகேயனின் பேனர் ஒன்றையும் பெரிய அளவில் வைத்துள்ளார். இந்த சேதி இணையதளங்கள் மூலம் சிவகார்த்திகேயனின் கவனத்துக்கு வந்தபோது இன்ப அதிர்ச்சியடைந்தாராம். உடனடியாக தனது பெயரில் கடை தொடங்கிய அந்த அன்பு ரசிகருக்கு சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் சென்றுள்ளதாம்.