ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய இளம் ஹீரோக்களில் ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்காமல் படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடிப்பவர் தனுஷ். நடிகராக மட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளராகவும் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு மிகப்பெரிய உதாரணம்... காக்கா முட்டை, விசாரணை படங்கள். இந்த வரிசையில் இடம்பிடிக்கும் தகுதி கொண்ட 'அம்மா கணக்கு' என்ற படத்தை தற்போது தயாரித்துள்ளார் தனுஷ்.
ஒரு சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு திரைப்பட விமர்சகர்களின் பராட்டுக்கள் பெற்ற ஹிந்தி படம் - 'நில் பேட்டே சனாடா'. அஸ்வினி ஐயர் என்ற பெண் இயக்குநர் இயக்கிய இப்படத்தை தமிழில் 'அம்மா கணக்கு' என்ற பெயரில் தயாரித்துள்ளார் தனுஷ். ஹிந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இயக்கியுள்ளார். அம்மா- மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டம் தான் இப்படத்தின்கதை!
சமுத்திரக்கனி, ரேவதி, அமலா பால் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அம்மா கணக்கு படத்தை சுமார் 50 நாட்களில் எடுத்து முடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகள் முடிவடைந்துவிட்டன. 'அம்மா கணக்கு' திரைப்படத்தை இம்மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இப்படம் தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு என்பதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கவன ஈர்ப்பு கிடைத்திருக்கிறது.