Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ் ஹீரோவாகும் விஜயசேதுபதி!

31 மே, 2016 - 09:36 IST
எழுத்தின் அளவு:
vijaya-sethupathi-as-mass-hero-in--rekka-movie-.

தமிழ் சினிமாவில் விஜயசேதுபதிக்கு டிரண்ட் செட்டர் என்றொரு பெயர் உண்டு. அந்த அளவுக்கு இப்படி நடித்தால்தான் ஹீரோ என்றிருந்த நிலையை மாற்றிக்காட்டியவர் அவர் மட்டுமே. மேலும் ஹீரோயிசம் இல்லாத கதைகளாக செலக்ட் பண்ணி கதையின் நாயகனாகவே நடித்து வந்த விஜயசேதுபதி, தான் ஹீரோ என்றபோதும் தனது படங்களில் மற்ற நடிகர் -நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஆனபோதும் காலத்தின் மாற்றம் அவரை மாற்றி விட்டது. சமீபகாலமாக அவரும் ஹீரோயிசத்தை கையிலெடுத்து வருகிறார்.


அந்த வகையில், நானும் ரவுடிதான், சேதுபதி படங்களுக்குப்பிறகு தற்போது பல படங்களில் நடித்து வரும் விஜயசேதுபதி, ஆரஞ்சு மிடடாய் படத்தை அடுத்து றெக்க படத்தை தானே தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஜய சேதுபதியை இயக்குனர் ரத்னசிவா பக்கா மாஸ் ஹீரோவாக மாற்றியிருக்கிறார். குறிப்பாக, விஜய் நடித்த கில்லி படம் போன்று ஒரு அதிரடியான கதையில் இந்த படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. தற்போது காரைக்குடியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் அங்கிருந்து இடம்பெயர்ந்து கும்பகோணத்தில் முகாமிடுகிறார்களாம். அந்தவகையில, இதுவரை ஆக்சன் காட்சிகளில் பெரிதாக ஆர்வம் காட்டாத விஜயசேதுபதி, இப்படத்தில் முதன்முறையாக அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in