ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராகதேவி புரொடக்ஷன் என்ற புதிய நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் குப்புசாமி தயாரிக்கும் படம் 'தகடு'. காக்கி சட்டை படத்தில் சத்யராஜ் தேடும் தகடைப்போல இதில் வரலாறு படிக்கும் மாணவர்கள், அந்த வரலாற்றில் குறிப்பிடப்படும் ஒரு நிகழ்வை தேடிப்போகிற கதை. பிரபா, அஜய் என்ற 2 புதிய ஹீரோக்களுடன் ஷனம் ஷெட்டி, ஹாசியாக, பிரியங்கா சுக்லா, ஆயிஷா, ராஜ்கபூர் உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார், சார்லஸ் மெல்வின் இசை அமைக்கிறார். எம் தங்கதுரை இயக்குகிறார்.
“கல்லூரியில் வரலாறு படிக்கும் மாணவர்களுக்கு வரலாற்றில் வரும் ஒரு சம்பவம் மிகவும் கவர்கிறது. அந்த சம்பவம் நடந்தது உண்மையா? அப்படி நடந்திருந்தால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள புதையலை அள்ளலாம் என்ற பேராசையுடன் அந்த இடத்தை தேடிப் போகிறார்கள். ஆனால் அங்கு நடப்பதோ இவர்கள் எதிர்பாராத விபரீதம். அதிலிருந்து எப்படி தப்பித்து வருகிறார்கள் என்பது கதை. ஆந்திராவில் உள்ள கங்குந்தி கோட்டையில் வரலாற்று நிகழ்வு படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்” என்கிறார் இயக்குனர் தங்கதுரை.