ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கபாலி'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இப்படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் படங்களின் இயக்குநர் ரஞ்சித் இயக்கியுள்ளார். தாணு தயாரித்துள்ளார். ரஜினியுடன் அட்டகத்தி தினேஷ், மெட்ராஸ் கலையரசன், தன்ஷிகா, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் கபாலி படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளை தாண்டி இப்போது மலாய் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. இருதினங்களுக்கு முன்னர் கபாலி மலாய் படத்தின் டீசரும் வெளியாகி அதுவும் ஹிட்டாகியுள்ளது.
இதனிடையே 'கபாலி' படத்தின் மலாய் வெர்ஷனுக்காக ரஜினியின் குரலில் டப்பிங் பேச சுமார் 200 பேர் வரை குரல் தேர்வு நடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 15 நாட்களாக நடந்த இந்த குரல் தேர்வில் ரஜினியின் கபாலிடா என்ற வசனத்தை ரஜினியின் குரலுக்கு ஏற்றார்போல் பேசுவதற்கு பலரும் முயற்சி செய்தனர். மலாய் மொழியில் ரஜினிக்கு குரல் கொடுக்க அருண் என்பவர் தேர்வாகியிருக்கிறார். இவர் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராம்.