ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அருந்ததி புகழ் அனுஷ்காவுக்கு 34 வயதாகி விட்டது. கல்யாணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் செட்டிலாகியிருக்க வேண்டியவர். ஆனால் இப்போதுவரை அவர் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவரது கால்சீட்டுக்காக முன்னணி இயக்குனர்களே காத்திருக்கின்றனர். தற்போது தெலுங்கில் பாகுபலி-2வில் நடித்து வரும் அனுஷ்கா அடுத்தபடியாக பாஹ்மதியில் நடிக்கிறாராம். அதோடு தமிழில் அஜீத்தின் 57வது படத்தில் நடிக்கயிருப்பதாகவும் ஒரு செய்தி கசிந்து கொண்டிருக்கிறது. இதெல்லாமே அவர் இன்னும் இளமையாக இருப்பதினால் தான் சாத்தியமாகியுள்ளது.
இந்த இளமையை அனுஷ்கா எப்படி பராமறிக்கிறார்? என்று கேட்டால், எல்லாமே பாசிட்டீவ் சிந்தனைதான் என்கிறார் அனுஷ்கா. எத்தனை பெரிய பிரச்சினைகள் என்னை சுற்றிவந்தாலும் அவற்றை நான் ஊதி தள்ளி விடுவேன். மனசை அந்த பிரச்சினைகள் பக்கம் சுற்ற விடாமல் என் கட்டுப்பாட்டிலேயே மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்கிறார். அதேசமயம், யோகா பயிற்சியை ஒருநாள்கூட தவற விடமாட்டேன். அந்த பயிற்சிதான் எனது உடம்பை இளமையாக வைத்திருக்கிறது. அதை பார்த்து நான் அடையும் மகிழ்ச்சி மனசில் நிறைந்திருக்கிறது. அந்த வகையில், பாசிட்டீவ் சிந்தனைகளைக்கடந்து யோகா பயிற்சியும் என் அழகுக்கு முக்கிய காரணமாகிறது என்கிறார் அனுஷ்கா.