ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமல்- சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடி செய்த சூரி, அதையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் படங்களில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் காமெடி செய்தார். அப்படி அவர்கள் இணைந்து நடித்த இரண்டு படங்களுமே காமெடிக்காகவே ஓடியது. அதனால், சிவகார்த்திகேயன்- சூரி கூட்டணிக்கு மார்க்கெட்டில் மவுசு ஏற் பட்டது. இருப்பினும், ரஜினிமுருகனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரெமோ படத்தில் சூரி இடம்பெறவில்லை. அவருக்குப்பதிலாக சதீஷ் நடித்துள்ளார்.
இதையடுத்து, சூரியுடனான உங்கள் கூட்டணி நன்றாக போய்க்கொண்டிருக் கும்போது எதற்காக ரெமோவில் சூரியை கட் பண்ணி விட்டீர்கள்? என்று சிவ கார்த்திகேயனை கேட்டால், சூரி அண்ணனை மிஸ் பண்ணியது எனக்கு வருத்தம்தான். ஆனால், அவர் பெரிய காமெடியன். அவருக்கு தீனிபோடும் அளவுக்கு இந்த ரெமோவில் போதுமான காமெடி இல்லை. அதனால்தான் அவர் நடிக்கவில்லை. என்றாலும், பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் சூரி அண்ணனுடன் காமெடியில் கலக்க தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.