மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாசக்கார பசங்க, கீறிப்புள்ள, சாட்டை, காதலைத்தவிர வேறொன்றுமில்லை, கமரக்கட்டு ஆகிய படங்களில் நடித்தவர் யுவன். தற்போது இளமி, விளையாட்டு ஆரம்பம், மொகைதீன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், யுவன் இளம் நாயகனாக நடித்த சாட்டை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தில் தம்பி ராமைய்யா, கிஷோர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் முதல் பாகத்தில் நடித்த யுவனின் பெயர் வெளியாகவில்லை. அதனால் அதுகுறித்து யுவனை கேட்டபோது,
நான் நடித்த படங்களில் சாட்டை எனக்கு ரொம்ப நல்ல பெயர் வாங்கித்தந்த படம். நல்ல படமும்கூட. அதையடுத்து நான் பல படங்களில் நடித்தாலும் சாட்டை யுவன் என்றுதான் என்று சொல்கிறார்கள். அதனால் அந்த படத்தின் 2ஆம் பாகத்தில் என்னை நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் இதுவரை என்னை யாரும் அந்த படம் சம்பந்தமாக தொடர்பு கொள்ளவில்லை என்கிறார்.
மேலும், இப்போது நடித்து வரும் படங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான கதைகளில் நடிக்கிறேன். குறிப்பாக, இளமி படத்தில் 18-ம் நூற்றாண்டு கதையில் நடிக்கிறேன். காளை மாட்டை அடக்கும் காட்சியும் உள்ளது. மொகைதீன் படத்தில் காதல் கதையில் நடிக்கிறேன். இப்படி தொடர்ந்து கதாநாயகனாக நடித்தபோதும் வில்லன் வேடம் கிடைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை பவர்புல்லான கேரக்டராக இருந்தால் எந்த வேடமாக இருந்தாலும் நடிப்பேன். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற எந்த கொள்கையும் என்னிடம் கிடையாது என்கிறார் யுவன்.