ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இரண்டு முறை தேசிய விருது வாங்கிய நடிகை கங்கனா ரணாவத். எப்படிப்பட்ட ரோலையும் அசால்ட்டாக நடித்துவிட்டு செல்லும் இவர், அடுத்தப்படியாக குஜராத்தி பெண்ணாக மாற இருக்கிறார். ஹன்சல் மேத்தா இயக்கும் புதியபடமான 'சிம்ரன்' என்ற படத்தில் கங்கனா, முதன்மை ரோலில் நடிக்கிறார். இதில் அவர் குஜராத்தி பெண்ணாக நடிக்க உள்ளார். பொதுவாக எந்த ஒரு கேரக்டரிலும் நடிக்கும் முன்பாக அந்த கேரக்டராக மாறுவது கங்கனாவின் வழக்கம். அதன்படி, இப்போது தான் நடிக்கவுள்ள குஜராத்தி கதாபாத்திரத்திற்காக முறைப்படி குஜராத்தி பயில இருக்கிறார். அதுமட்டுல்ல, அங்குவாழும் பெண்களின் மேனரிசங்களையும் கற்றுக்கொள்ள இருக்கிறார்.