ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மச்சி உள்பட சில படங்களில் நாயகனாக நடித்தவர் துஷ்யந்த். சிவாஜிகணேசனின் பேரனான இவர் படவாய்ப்புகள் கிடைக்காமல் நடிப்பை விட்டு விலகினார். இருப்பினும், தற்போது மீன்குழம்பும் மண்பானையும் என்ற படத்தை ஈஷான் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க, ஜெயராமின் மகன் காளிதாஸ், பூஜாகுமார், ஆஷ்னா சவேரி, ஊர்வசி மற்றும் கமல்ஹாசன் நட்புக்காக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார்.
மேலும், அமுதேஷ்வர் இயக்கியுள்ள இந்த படம் மலேசியாவில் இயங்கி வரும் தமிழ் ஹோட்டலை மையப்படுத்திய கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மே 28-ந்தேதி இப்படத்தின் இசை வெளியீடு சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெறுகிறது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளரான துஷ்யந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.