விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
அபியும் நானும் படத்தில் திரிஷாவின் கணவராக நடித்தவர் கணேஷ் வெங்கட்ராமன். அதன்பிறகு தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் ஹன்சிகாவுடன் நடித்தார். இப்போது திரிஷாவுடன் நாயகி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் திரிஷாதான் லீடு ரோலில் நடித்துள்ளார். என்றாலும், கணேஷ் வெங்கட்ராமனுக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ளதாம்.
இதுபற்றி கணேஷ் வெங்கட்ராமன் கூறுகையில், நாயகி படத்தில் நடிப்பதற்கு என்னை ஒப்பந்தம் செய்ய வந்தபோது திரிஷா நடிக்கிறார் என்றதும் கதை யைகூட கேட்காமல் ஒத்துக்கொண்டேன். காரணம், அபியும் நானும் படத்தில் இருந்தே நானும் திரிஷாவும் பெஸ்ட் ப்ரண்டாக இருந்து வருகிறோம். தனது பல விசயங்களை ஒரு ப்ரண்டாக என்னுடன் அவர் ஷேர் பண்ணிக்கொள்வார். அந்த வகையில் அவர் நல்ல நடிகை என்பதோடு என்னைப்பொறுத்தவரை நல்ல தோழி. அதோடு, இந்த நாயகி படத்தில் நான் டம்மியான ஹீரோவாக இல்லாமல் வெயிட்டான வேடத்தில்தான் நடித்திருக்கிறேன் என்கிறார் கணேஷ் வெங்கட்ராமன்.