ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ஹன்சிகா. சமூக வலைத்தளமான டிவிட்டரில் முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர். தென்னிந்திய ஹீரோயின்களில் டிவிட்டரில் அதிக தொடர்பாளர்களைக் கொண்ட நடிகைகளில் இவரும் ஒருவர். தற்போது 2 மில்லியன் தொடர்பாளர்களைத் தொட்டு சாதனை படைத்திருக்கிறார்.
ஹீரோயின்களில் ஸ்ருதிஹாசன் 3.83 மில்லியன் தொடர்பாளர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். த்ரிஷா 2.59 மில்லியன் தொடர்பாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அப்படி ஒன்றும் பெரிய மார்க்கெட் இல்லாத நடிகையாக இவர் இருந்தாலும் இவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆச்சரியமான ஒன்றுதான். இவருக்கு அடுத்து சமந்தா 2.28 மில்லியன் தொடர்பாளர்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
மற்ற நடிகைகள் இன்னும் ஒரு மில்லியனைக் கூடத் தொடாமல் இருக்கிறார்கள். முன்னணியில் எந்த ஹீரோயின் இருக்கிறார் என்பதை அவரைத் தொடரும் தொடர்பாளர்களின் எண்ணிக்கையை வைத்து கூடக் கணக்கிடலாம். தமிழில் முன்னணி நடிகையாக இருக்கம் நயன்தாரா இன்னமும் எந்த சமூக வலைத்தளம் பக்கமும் வராமல் இருக்கிறார். ஒருவேளை அவர் இணைந்தால் முதலிடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.