Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு சமந்தா சொல்லும் அட்வைஸ்: டுவிட்டரில் கலகல...

13 மே, 2016 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Samantha-Chats-with-Fans-in-Twitter

தமிழ், தெலுங்கில் தற்போதைக்கு முன்னணி ஹீரோயினாக இருப்பவர் சமந்தா. சென்னை, பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சமந்தா, மாடல் ஆக இருந்து தமிழில் நாயகியாக அறிமுகமாகி, தெலுங்கு பக்கம் சென்று அங்கு அநேக ஹீரோக்களுடன் நடித்து நம்பர் 1 ஆக இருக்கிறார்.


தமிழில் 'தெறி, 24' என அடுத்தடுத்து இரண்டு ஹிட்டுக்களையும், தெலுங்கில் 'பிரம்மோற்சவம், அ...ஆ' ஆகிய வரப்போகும் இரண்டு ஹிட்டுக்காகவும் காத்திருக்கிறார். நேற்று டிவிட்டரில் ஒரு மணி நேரத்திற்கு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.


அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் விதத்தில்தான் ரசிகர்கள் பல கேள்விகளைக் கேட்டார்கள்...முதல் கேள்வியே விஜய்யைப் பற்றிய கேள்வியாக வந்தது...


விஜய்யைப் பற்றி ஒரு வார்த்தையில்...?


தெறிடா...


வெற்றியையும், தோல்வியையும் எப்படிப் பார்க்கிறீர்கள் ?


அவை என்னை சமமாகவே பார்க்க வைக்கின்றன.


தமிழ்நாடு தேர்தலைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?


தயவு செய்து ஓட்டு போடுங்கள், அடுத்தவர்கள் உங்கள் முடிவை எடுக்க வேண்டாம்.


நீங்கள் மலையாளத்தில் நடிக்க விரும்பினால் யாருடன் ஜோடி சேர்ந்து நடிக்க விருப்பம் ?


துல்கர் சல்மான்


உங்கள் அபிமான நடிகர் யார் ?


இப்போது எட்டி ரெட்மேய்ன்


உங்கள் எப்போதுமான அபிமான படம் எது ?


ஷஷாங்க் ரிடம்ப்ஷன்


உங்கள் வாழ்க்கையின் முக்கியமான லட்சியம் எது ?.


திரையுலகத்திற்குப் பிறகான வாழ்க்கையில் வெற்றி.


பயணத்தின் போது மறக்காமல் நீங்கள் எடுத்துச் செல்லும் பொருட்கள் என்ன ?


என் தோல் பாதுகாப்பு பற்றிய பொருட்கள், மருந்துகள், தரமான உள்ளாடைகள்


சாகும் காட்சிகளில் நடிக்கும் போது அழ வைத்து விடுகிறீர்களே ? அது பற்றி...


உங்களை அழ வைக்கும் அளவிற்கு நடிப்பேனா என்பதுதான்...


கமர்ஷியல் வெற்றி அல்லது நல்ல விமர்சனம் ?


இரண்டுமே...


சில சமயங்கள் ஆட்ரே ஹெப்பர்ன்-ஐ ஆடை அலங்காரத்தில் ஞாபகப்படுத்துகிறீர்கள், அவர் உங்களை பாதித்துள்ளாரா ?


நன்றாகவே...


உங்கள் வாழ்க்கையில் இது இல்லாமல் இருக்க மாட்டேன் என நீங்கள் நினைப்பது ?


சவால்


நீங்கள் நடிகையாக இல்லையென்றால் என்னவாகியிருப்பீர்கள் ?


வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும்...


குற்றத்தனமான சந்தோஷம் எது ?


கவலையாக இருந்தால் நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிடுவேன்....


உங்கள் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம் எது ?


அதை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...


குலாப் ஜாமூன் அல்லது ரசகுல்லா ?


குலாப் ஜாமூன்...


மக்களின் எந்தக் கேள்வி உங்களை வெறுப்படைய வைக்கும் ?


ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஏதாவது ஒரு சம்பவத்தைச் சொல்லுங்கள் என்பார்கள் அதுதான்...அது ஏன் என்னை வெறுப்படைய வைக்கிறது என்பது தெரியாது ?.


உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ரசித்த சிறந்த படம் எது ?


அது நிறைய இருக்கிறது....


உலகத்திலேயே உங்களது விருப்பமான இடம் எது ?


வீட்டைத் தவிர வேறு சிறந்த இடம் எதுவுமில்லை...


கேரளாவில் உங்களது அபிமான இடம் எது ?


ஆலப்புழை


உயிருடன் அல்லது இறந்தவர்கள் யாருடன் விருந்து சாப்பிட வேண்டும் ?.


ஆட்ரே ஹெப்பர்ன், ஹிட்லர் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில்.


எந்த கேள்விக்கு பதிலளிப்பது உங்களை எரிச்சலடைய வைக்கும் ?


உங்களுடன் நடிப்பவர்களில் யாரைப் பிடிக்கும்...என்ற கேள்வி...


உங்களுக்குப் பிடித்தமான புத்தகம் எது ?


சாந்தாராம்


உலகத்தில் எந்த நாட்டிற்குப் போக விருப்பம் ?


பாரிஸ்


வெற்றியின் ரகசியம் என்ன ?


ரகசியம் எதுவுமில்லை, கடின உழைப்புதான்...


நீங்கள் எடுத்த ஏதாவது ஒரு முடிவு பற்றி வருத்தப்பட்டிருக்கிறீர்களா ?


ஆமாம், 2012ல் எடுத்த சில முடிவுகளைப் பற்றி...


அட்லீ, 'தெறி 2'ம் பாகத்திற்கு நடிக்க அழைத்தால் போவீர்களா ?


அதில் என்ன சந்தேகம்...


இயக்குனர் அட்லீ பற்றி ....


எந்தவிதமான சந்தேகத்தின் நிழலும் இல்லாமல் அவர் ஒருவருடன் பணியாற்றுவேன்...


உங்கள் விருப்பமான நிறம் எது ?


சீசனுக்கு ஏற்றபடி மாறும்...


தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் சிறிய அட்வைஸ் என்ன ?


அனைத்து இளைஞர்களே, பெரிதாகக் கனவு காணுங்கள்...சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள்...


ஜிம் அல்லது காபி ஷாப் ?


ஜிம்...


உங்கள் விருப்பமான உணவு ?


ஜப்பானிஸ்...


யாருடன் நடனமாட பயப்படுவீர்கள் ?


ஜுனியர் என்டிஆர்.


கடவுள் உங்களுக்குக் கொடுத்த மிகச் சிறந்த விஷயம் எது ?


என்னுடைய உறுதி...


ஹாரர் படங்களில் நடிக்க ஐடியா உள்ளதா ?


ஆமாம்..ஆமாம்..ஆமாம்..


உங்களுடைய உண்மையான போட்டியாளர் யார் ?


நான் போட்டியை விரும்புபவள், அது உத்வேகத்தைக் கொடுக்கும். ஆனால், பெயர் மட்டும் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கும்...


கடினமான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வீர்கள் ?


தனிமையாக இருப்பேன்...


நடிக்காத போது எந்த விஷயத்தைச் செய்ய ஆசைப்படுவீர்கள் ?


சமைக்கக் கற்றுக் கொள்வேன்...


உங்களுக்கு வரும் மிகச் சிறந்த பயம் எது ?


ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் போவது...


உங்களுடைய ஸ்டைல் பற்றி...


சிறிய மற்றும் கம்பீரமானவள்...


உங்களிடம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது ?


'மூடி'யாக இருப்பதை...


உங்களைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்...


ஒரு வார்த்தை கடினம், நான் தேர்வு செய்ததே நானாக இருக்கக் காரணம்...


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in