ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அப்படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் படத்தை சரியான நேரத்தில வெளியிட வேண்டும் என்று இறுதிகட்ட பணிகளில் தீவிரமடைந்துள்ள டைரக்டர் ரஞ்சித், ஜூலை மாதம் அதாவது ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிட திட்டமிட்டிருந்தாராம். ஆனால் இப்போது ஜூலை1-ந்தேதியை கபாலியை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
காரணம், இந்தியில் சல்மான்கான் நடித்துள்ள சுல்தான் படம் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. அந்த படமும் ராம்ஜான் பண்டிகையில் வெளியாகிறதாம். ஆனால் இரண்டு பெரிய படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் வசூல் பாதிக்கக்கூடும் என்பதால், ரஜினியின் கபாலியை ஜூலை1-ந் தேதியே வெளியிடப்போகிறார்களாம். அதோடு, ரஜினியின் கபாலி ஜூலையில் எந்த தேதியில் வெளியாகிறது என்பது திட்டவட்டடமாக வெளியிடப்படாமல் இருந்ததால், தனுஷின் கொடி உள்பட பல படங்களின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியாமல் அந்த நிறுவனங்கள் குழம்பி வந்தன. ஆனால் தற்போது ஜூலை 1-ந்தேதியே கபாலி வெளியாகி விடும் என்பதால் அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் தங்களது படங்களை வெளியிட மேற்படி பட நிறுவனங்கள் தியேட் டர்களை புக் பண்ண தயாராகி விட்டன.