ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி முருகனைத் தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் ஜோடி இணைந்துள்ள படம் ரெமோ. இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவகார்த்திகேயன் இதுவரை நடித்ததை விட அதிக பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது. மேலும், அவரது பேவரிட் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் நர்ஸ் வேடம் உள்பட சில கெட்டப்புகளில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகப்போகிறது என்று அவ்வப்போது கூறிவந்தார்.
இந்நிலையில், நேற்று காலை இன்று மாலை 4 மணிக்கு ரெமோ பர்ஸ்ட் லுக் குறித்த செய்தி வெளியிடப்படும் என்று டுவிட் செய்திருந்தார். அதன்படி நேற்று மாலை ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக் வருகிற ஜூன் மாதம் 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து ஜூன் மாதமே டீசர் மற்றும் ஆடியோ வெளியோவை வெளியிட்டு, ஜூலையில் ரெமோவை ரிலீஸ் பண்ணவும் சிவகார்த்திகேயன் தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.