ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் போல்ட்டான நடிகை வித்யாபாலன். எப்படிப்பட்ட ரோலிலும் சிறப்பாக நடிக்கக்கூடிய திறமைப்பெற்றவர். தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்திற்காக தேசிய விருது பெற்றவர், அடுத்தப்படியாக கஹானி படத்திலும் அற்புதமான தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். அந்தப்படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. 'கஹானி' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'கஹானி-2'வும் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார் வித்யாபாலன். வித்யாபாலன் உடன் அர்ஜூன் ராம்பால் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். சுஜாய் கோஷ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் கஹானி-2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி கஹானி-2 படம் வருகிற நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வித்யாபாலன், அமிதாப்பச்சன் உடன் நடித்துள்ள டீன் படம் வருகிற ஜூன் 10ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.