ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சூர்யா தயாரித்து நடிக்கும் '24' படம் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் என்ற விளம்பரத்தோடு வெளியாகும் '24' படம், சூர்யா நடித்து வெளியான முந்தைய படங்களை விட இன்னொரு வகையிலும் சாதனை படைத்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் 24 படம் வெளியாக இருக்கிறது என்பதுதான் அந்த சாதனை.
உலகம் முழுக்க 1500 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக முதலில் சொல்லப்பட்டது. இடையில் என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. தற்போது 2200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகவிருக்கிறது என்று சொல்கிறது தயாரிப்பு தரப்பு. அவற்றில் கேரளாவில் மட்டும் 200 தியேட்டர்களுக்கும் மேல் '24' படம் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் பிரபல விநியோக நிறுவனமான சோபானம் ஃபிலிம்ஸ்தான் '24' படத்தின் விநியோக உரிமையைவாங்கியுள்ளது.
தமிழகத்திற்கு அடுத்த படியாக ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் சூர்யாவுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்களாம். அதனால்தான் சூர்யா நடிக்கும் படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் படத்திற்கு படம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்கிறார்கள்.
இது உண்மையா? கேரள, ஆந்திர மக்கள்தான் சொல்ல வேண்டும்.