ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா நடித்திருக்கும் 'இறைவி' படம் முடிவடைந்து பல மாதங்களாகியும் தியேட்டர்கள் கிடைக்காததினால் ரிலீஸ் தேதிக்கு காத்திருந்தது. இந்நிலையில் இம்மாதம் 20-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது இறைவி படம். ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், அபி&அபி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. அதாவது, ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் படத்தைத் தயாரித்து அபி&அபி நிறுவனத்திடம் விற்றுவிட்டது. இறைவி படத்தை தமிழகம் முழுக்க அபி&அபி வெளியிடுகிறது.
இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே இணையதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தநிலையில் இறைவி படத்தின் டிரைலரை சூர்யாவின் '24' படத்துடன் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர். சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ள 24 படத்தை தமிழகத்தில் வெளியிடும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், இறைவி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்.