ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'அம்புலி 3டி' 'ஆ' ஆகிய படங்களை இயக்கிய இரட்டையர்கள் ஹரி, ஹரிஷ். இவர்கள் இயக்கிய படங்கள் வெற்றிப்படங்கள் இல்லை என்றாலும், சற்று வித்தியாசமான முயற்சியாக இருந்தன. தங்களது மூன்றாவது படமாக ஹரி, ஹரிஷ் இயக்கியுள்ள படம் 'ஜம்புலிங்கம் 3டி'. இந்தப் படத்துக்கு ஏற்கனவே வைக்கப்பட்ட பெயர் ஜம்போ.
ஜம்போ என்பது ஆங்கில வார்த்தை என்பதால் வரிவிலக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து சென்சாருக்கு செல்வதற்கு முன் ஜம்புலிங்கம் என்று பெயரை மாற்றிவிட்டனர். இந்த படத்தில் கோகுல், அஞ்சனா ஜோடியாக நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற்றுள்ளது. ஜம்புலிங்கம் படம் முடிவடைந்து நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது.
இந்நிலையில், குழந்தைகளை கவரும் வகையில் அண்மையில் வெளியான 'த ஜங்கிள் புக்' திரைப்படம் அனைத்து ரக ரசிகர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'த ஜங்கிள் புக்' படத்தை போன்று இந்தப்படமும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் குழந்தைகளுக்கான படம் என்பதால் கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படத்தை இம்மாதம் 13ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.